Nothing to say tamilnadu fans should realize the stars

இதில் இருப்பவர்கள் உலக செய்திகளையும், தகவல்களையும் தங்கள் விரல் நுணியில் வைத்திருப்பது போன்று மக்களுக்கு காட்டுபவர்கள் தங்களுக்கு தெரியமால் இந்த உலகத்தில் எதுவும் நடந்திருக்காது போன்று மேடைகளில் பேசுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இந்த லைக்கா யார்? சுபாஸ்கரன் யார்? கருணாமூர்த்தி யார் என்தெல்லாம் தெரியவே தெரியாது ஏன் தெரியுமா? இதுவரை எவனும் கொடுக்கத் துணியதா பணத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றார்கள் அதனால!
லைக்கா நேற்றுவரை மகிந்தவின் மகனுடனும், மகிந்த கட்சி எம்.பி ஜெயசூர்யாவுடனும், இறுக்கி அணைத்தபடி திரிந்தார்கள் கேட்டதற்கு ஜெயசூர்யா நெடுநாள் நண்பர் என்றார்.

இலங்கையில் ஆட்சியும் மாறியது இலங்கையில் தொழிலே செய்வில்லை என்றவர்கள் எங்களுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பில்லை என்றவர்கள் திடீரென மகிந்த போனவுடன் மகிந்ததவுக்கு சற்றும் குறைவில்லாமல் தமிழர்களை கொன்று குவித்த சந்திரிக்காவை அழைத்து வந்து லைக்கா கட்டிய கட்டித்தை திறந்தார்கள். 
சற்றும் வெட்கம் இல்லாமல் இளித்துக்கொண்டு படத்திற்கு போஸ் கொடுத்தார்கள்.

நேற்றுவரை மகிந்த தரப்பு மகிந்த தோற்றவுடன் சந்திரிக்கா தரப்பு, ஏன் ஊரில் உள்ள கூட்டமைப்பு சந்திரிக்காவுடன் கூட்டணி அமைக்கும் போது நான் மட்டும் சந்திரிக்காவை அழைத்து கட்டிடத்தை திறக்கக் கூடாதா எனக் கேட்பார்கள். 

சம்மந்தர் அவர்கள் எப்படி தனது சுலநலத்திற்காக தனது இனத்தை வாக்குக்கு விற்றாரோ அதைப்போல்தான் நீங்களும் என்பதை அறியுங்கள்.

அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கம் தமிழனை அல்ல தாயையே அழித்தவனாக இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை அவர்கள் நோக்கம் பணம் மட்டும்தான். இந்த நடிகர்கள் விமர்சகர்கள் எல்லாம் இப்போது எதிர்த்தால் ஏன் இப்போது எதிர்க்கின்றீர்கள் என்பார்கள் ஏன் படம் தொடங்கும் முன்பு இவர்கள் பற்றி உங்களால் அறிய முடியாதா?
மகிந்தவுடன் தொடர்பில்லை என்றவர்கள் எப்படி சந்திரிக்காவுடன் தொடர்பில் வந்தார்கள், ஆம் சிங்கள பயங்கரவாத அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு உதவிகள் தமிழர்களுக்கு செய்ய முடியாது, ஆனால் சிங்களவர்களை தாண்டி தமிழர்களுக்கு சுதந்திரமாக உதவி செய்யக்கூட சிங்களவர்கள் விடுவதில்லை, அப்படியென்றால் தமிழர்கள் எவ்வளவு சுதந்திரம் அற்றவர்களாகவும், அடக்குமுறைக்குள் வாழ்கின்றார்கள் என்பதை இவர்கள் ஊடகங்களை கூட்டி உலகிற்கு தெரிவிப்பார்களா? இதுவரை தமிழர்கள் நடத்திய போராட்டம் சரியானது என இவர்களால் வெளிப்படையாக கூற முடியுமா? செய்ய மாட்டார்கள் காரணம் இவர்களின் உதவிக்கு பின் உள்ள நோக்கமே பணம்தான்.

போலி நடிகர்கள், போலி அரசியல்வாதிகள், போலி முதலாளிகள், போலித் தமிழர்கள். பணத்திற்கும், புகழுக்கும் எதையும் செய்யத் தயங்காத அதி பயங்கர கூட்டங்கள் இவர்கள்.

  Leave a Reply

Tamil English

Message

 

All Rights Reserved. TamilA1.com Privacy Policy