Tamil volunteers in chennai flood

✅ஆயிரம் அப்துல் கலாம்கள் செய்யாததை செய்து முடித்த மழை வெள்ளம்.

✅அப்துல் கலாம் என்னவெல்லாம் ஆசை பட்டரோ அதுவெல்லாம் நடக்கிறது தமிழகத்தில்...

✅இன்று சாதியில்லை, மதம் இல்லை, கட்சி இல்லை, "மனிதன்" என்ற ஒன்றே உள்ளது.

✅இளைஞர்களின் எழுச்சி இந்த நிலையில் இருந்தால் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே 2020 க்குள் வல்லரசாகிவிடும்..

✅தமிழக இளைஞர்கள் சினிமா மற்றும் நடிகர்கள் பின்னால் தங்களின் மாபெரும் சக்தியை தொலைத்து வாழ்ந்ததை இந்த வெள்ளம் அவர்களுக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது!

✅யார் சொல்லியும் அடங்காத ரசிகர்களின் சண்டை ஒரு வெள்ளத்தினால் அடங்கி விட்டது!

✅இணையத்தில் உதவிகளை பகிர்வதில் இருந்து நேரடியாக களத்தில் உதவி செய்வதுவரை என இவர்களின் செயல் பாராட்ட தக்கதாக உயர்ந்துள்ளது .

✅அதே வேலை யார் நாம் நமதுபலம் என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தி உள்ளது!

✅ நடிகர்களுக்காக விரையமாகும் தமது நேரம் மக்களுக்காக விரையமாகி இருந்தால் சென்னை உட்பட தமிழகமே வெள்ளத்தில் முழ்கி இருக்காது என்று உணர்த்தி உள்ளது ஆழமாக..

✅இனி வரும் காலத்தில் சமூகபொறுப்பு முதன்மையானது சினிமா பொழுதுபோக்கு என்று உணர்ந்து நடப்பார்கள் என நம்ப வைத்துள்ளது..

✅சமூக அக்கறையுடன் செயல்பட்ட செயல் படும் அணைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.....

✅சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள காட்சிகளை காணும் பொழுது கண்களில் வழியும் கண்ணீரையும் தாண்டி மனசுக்குள் கம்பீரம் எட்டி பார்க்கிறது நாம் எல்லாம் தமிழர்கள் உலகுக்கே மனித நேயத்தை கற்று தந்தவர்கள் நாம் ஒன்றாய் உயர்வோம் தமிழர்களாய்


  Leave a Reply

Tamil English

Message

 

All Rights Reserved. TamilA1.com Privacy Policy