Thanks to Umman Chandi opinion about tamilnadu in tamil

உலகிற்கு உண்மையை உரக்க சொன்ன மாண்புமிகு கேரள முதல்வர் உம்மன்சாண்டி அவர்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டில் ஒரு உள்கலகம் நடந்து வருகிறது. அங்கே தமிழர்கள் வீறுகொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எழுந்து வருகிறார்கள். இத்தனை நாளாய் திராவிடம் என்ற பேரால் அவர்கள் சுரண்டப்பட்டு வந்தார்கள். திராவிடம் என்ற பேரால் பிறமொழியினர் தமிழர்களை ஆட்சிசெய்து வந்தார்கள்.!
அங்கே திட்டமிட்ட சில பேரால் தேவையில்லாமல், மலையாளிகளும் திராவிடத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். என்னை யாரவது நீ திராவிடனா என்று கேட்டால், நான் என்னை மலையாளி என்று மட்டும் தான் சொல்லிக் கொள்வேன். தமிழ்நாட்டில் திராவிடத்தின் பேரால் வேற்று இனத்தவர் ஆட்சி செய்கிறார்கள். இதில் எனக்கு தனிப்பட்ட உடன்பாடு இல்லை.!
கேரளத்தை மலையாளிகள் ஆளுவதைப் போலவே, தமிழகத்தை தமிழர்கள் ஆளுவது தான் முறையானது. தமிழர்கள் நல்லவர்கள். எவரையும் நம்பக் கூடியவர்கள். மனித நேயமிக்கவர்கள். கடந்த 50 ஆண்டுகளாய் அவர்கள் பிற இனத்தவரை ஆட்சி செய்ய அனுமதித்து இருக்கிறார்கள்.!
ஆனால்; இப்போது திராவிடத்தின் ஒரு பகுதியினர் தமிழகத்தை சுரண்டி விட்டார்கள். தமிழர்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்து விட்டார்கள். அதனால் தமிழர்கள் இப்போது விழிப்பு பெற்று தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை திரும்பக் கேட்கிறார்கள். இது சரியானதே.! தமிழகத்தின் இந்த எழுச்சி கேரளாவிலும் எதிரொலிக்கிறது என்பதை நாம் உணர்கிறோம்.
தமிழர்கள் இனஉணர்வு பெற்று வருகிறார்கள்.. இனி வேற்று மொழியினர் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை பெறுவது இலகுவானதல்ல.! எனவே, தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் இந்த திராவிடத்தில் தங்களை எந்த விதத்திலும் ஈடுபடுத்திக் கொள்ளாமல், தமிழர்களோடு இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும். கேரளாவில் வாழும் மலையாளிகளை விட, தமிழகத்தில் வாழும் மலையாளிகள் அதிக வசதி வாய்ப்போடு வாழ்கிறார்கள். எனவே, தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களை கருத்தில் கொண்டு, தமிழர்களோடு இணக்கமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.!
நமது எம்.ஜி.ஆர் கூட தமிழ்நாட்டை ஆண்டு இருக்கிறார். ஆனால் அவர் மீது இன்றளவும் தமிழர்களுக்கு கோபம் இல்லை, ஏனெனில் அவர் தமிழர்களோடு தமிழராய் வாழ்ந்து அவர்களின் அன்பைப் பெற்று விட்டார். அவர் ஒரு திராவிடராகவோ, மலையாளியாகவோ தன்னை உணராமல் தமிழராக உணர்ந்து அவர்களின் உணர்வில் கலந்து விட்டார். ஆகவே எம்ஜிஆர் மீது தமிழர்களுக்கு எந்த வித வெறுப்பும் இல்லை.!
ஆனால் அதற்கு பிந்தைய திராவிடர்கள் தமிழர்களை ஏமாற்றி அவர்களின் கலாச்சார, பொருளாதார வளங்களை சுரண்டி அழித்து விட்டதாக தமிழர்கள் தற்போது உணருகிறார்கள். தமிழர்களை கொள்ளையடித்துவிட்டதாக அவர்கள் உணருகிறார்கள்.! இந்த பழி நம் மீது விழுந்து விடாமல் இருக்கவும், மலையாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் நாம் மிகவும் கவனமாக தனித்து செயல்பட வேண்டும்... தமிழர்களின் ஆதரவை நாம் பெறவேண்டும். முடிந்தவரை தமிழர்களாய் அவர்களோடு இணைந்து வாழுங்கள்.!

‪#‎கேரள_முதல்வர்_உம்மன்சாண்டி‬

  Leave a Reply

Tamil English

Message

 

All Rights Reserved. TamilA1.com Privacy Policy