Who is responsible for chennai flood 2015 in tamil

சென்னை மூழ்குவதற்கு யார் காரணம்... ?
*************************************************
ஒட்டுமொத்த சென்னையின் மக்கள் தொகை 48,28,853 நபர்கள், அதாவது அரை கோடி மக்கள்...

ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 27000 நபர்கள் வீதம்சென்னையில் வசிக்கிறார்கள்... அதாவது நான்கு சதுர மீட்டருக்கு ஒரு நபர் வீதம் அல்லது 43 சதுர அடிக்கு ஒரு நபர் வீதம்... கிட்டத்தட்ட ஏழு அடி நீளம்... நான்கு அடி அகலம் உள்ள அறைக்கு ஒருவர் வீதம் சென்னையில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களும் வசிக்கிறார்கள்.... அதாவது அவ்வளவு நெருக்கமான மக்கள் தொகை அடர்த்தி....

இவர்கள் அனைவருமே தினமும் சராசரியாக 40 லிட்டர் தண்ணீரில் குளிக்கிறார்கள்.... 3 லிட்டர் தண்ணீரில் மலம் கழுவுகிறார்கள்... ஒரு நாளைக்கு 200 மில்லி வீதம் ஏழு முறை வீதம் சராசரியாக 1.5 லிட்டர் தண்ணீரை சிறுநீராக வெளியிடுகிறார்கள்... அதை சிறுநீரை அலம்புவதற்கு ஒவ்வொரு நாளும் 14 லிட்டர் தண்ணீர் செலவழிக்கிறார்கள்... சாப்பிட்ட பிறகு கைகழுவுவதற்கு ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் தண்ணீர்.... ஒரு தனி நபரின் ஒரு நாள் துணியை துவைத்து அலசுவதற்கு 40 லிட்டர் தண்ணீர்... தனிநபரின் ஒரு நாள் சமையல் பாத்திரங்கள் கழுவுவதற்கு 10 லிட்டர் தண்ணீர்....

ஆக மொத்தம் ஒரு மனிதனின் சராசரி தண்ணீர் உபயோகம்... 40 + 3 + 1.5 + 14 + 1.5 + 40 + 10 அதாவது ஒரு நாளைக்கு 43 சதுர அடிக்கு 110 லிட்டர் தண்ணீர்... ஆக மொத்தம் 53,11,73,830 லிட்டர்கள்... அதாவது 0.18 டிஎம்சி தண்ணீர் சென்னை மக்களால் புழங்கப்பட்டு பாதாள சாக்கடை வழியே செல்கிறது... கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு டிஎம்சி தண்ணீர் பாதாளச் சாக்கடை வழியாக கடத்தப்படுகிறது...

ஆனால் இவ்வளவு தண்ணீரும் அனைத்துமே வீடுகளின் உள்ளேயிருந்து பாத்ரும்வழியாகவும்... டாய்லெட் வழியாகவும்... இதர குழாய்கள் வழியாகவும் தான் பாதாள சாக்கடை பிரிவிற்கு கடத்தப்படுகிறது... சராசரியாக ஒரு வீட்டிற்கு நான்கு துவாரங்கள் மற்றும் குழாய்கள்வழியாக பாதாள சாக்கடைக்கு இணைப்பு இருக்கிறது... இந்த நான்கு துவாரங்களில் ஏதாவது ஒரு துவாரத்தில் அடைப்பு ஏற்பட்டு விட்டாலும் அதன் வழியாக தண்ணீர் பாதாள சாக்கடைக்கு கடத்தப்படாமல் வீட்டிற்குள்ளேயே திரும்புவதற்குவாய்ப்பிருக்கிறது...

உதாணரத்திற்கு பாத்திரம் கழுவும் தொட்டியில் சோற்றுப்பருக்கைகளும்... காய்கறி கழிவுகளும் சல்லடைக்குள் சிக்கிக்கொண்டால் பாத்திரம் தொடர்ச்சியாக கழுவப்படும்போது... சிங்க் நிறைந்து விடும்... இது போலத்தான் குளியலறையில் உள்ள ஃபில்டர் துவாரத்தில் ஷாம்புபாக்கெட்டுகள்.. மற்றும் சோப் கவர்கள்... பிளாஸ்டிக் பைகள் அடைத்துக்கொண்டால் பாத்ரூமில் தொடர்ச்சியாக குளித்தாலும் முட்டியளவு தண்ணீர் தேங்கி விடும்...

ஆனால் வீட்டிற்கு வெளியே... தெருக்களில், சந்துக்களில், சாலைகளில் மனிதர்களால் ஊற்றப்படும் தண்ணீர் வகையறாக்கள்.. மற்றும் மழைபெய்யும் போது சாலையில் விழும் தண்ணீர் வகையறாக்கள் போன்றவை... பாதாளச் சாக்கடைக்குள் போவதற்கு என்று அரசினால் ஒவ்வொரு தெருவிலும் சாலையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சல்லடை துவாரங்கள் மற்றும் வட்ட வடிவிலான இரும்பு மூடிகளைக் கொண்ட துவாரங்களும்தான் முக்கியமான நீர் வடிகால் பாதைகள்....

சராசரியாக 100 மீட்டருக்கு ஒரு பாதாளச்சாக்கடை துவாரமாவது அரசினால் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது தான் நாம் அனைவரும் அறிந்த உண்மை... மழை பெய்யும்பொழுதெல்லாம் சாலையில், தெருக்களில், சந்துக்களில், வீட்டின் கூரைகளில், மொட்டை மாடிகளில் விழும் அத்தனை தண்ணீரும் ஒன்றாக திரண்டு ஒரு குட்டி ஆறுபோல மாறி பயணித்து... இது போன்ற துவாரங்களின் வழியாகத் தான் பாதாளச் சாக்கடைக்குள் கடத்தப்படும்....

ஆனால் நமது இந்தியத் திருநாட்டில்... நாகரீக மனிதர்கள் வாழும் தாய்த்திருநாட்டில்... நமது ஒழுக்கமான மனிதர்களால் சாலைகளில், தெருக்களில், சந்துக்களில் வீசியெறிப்படும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள், குடிநீர் பெட் பாட்டில்கள், பேப்பர்-துணி-பிளாஸ்டிக்-இரும்பு-மண்-கற்கள் போன்ற அனைத்து விதமான குப்பைகளும் வீதியெங்கும் தான் இறைந்து கிடக்கின்றன....

பெரிய மழை நேரத்தில் சிறு துளி பெரும்ஆறாய் மாறி தண்ணீர் பயணிக்கையில் இது போன்ற குப்பைகள்மிதந்து அந்த மழைவெள்ளத்துடன்தான் பயணிக்கும்... மழை நீர் மேற்சொன்ன பாதாளச்சாக்கடை துவாரத்திற்குள் நுழைந்து பயணிக்கும் போது... இந்த குப்பைகளும் அதற்குள் உள்ளே போக முயற்சி செய்யும்... துவாரம் சிறிதளவிலும்.. குப்கைள்பெரியஅளவிலும் இருக்கும் போழுது.. அந்த துவாரம் அடைபட்டு அடைபட்டுஅடைபட்டு முழுவதுமாக துவாரங்கள் குப்பைகளால் கழிவுகளால் இறுக்கப்பட்டு... அந்த துவாரங்கள் ஒரு துளி நீர் கூட பாதாளச் சாக்கடைக்கு போக முடியாத அளவிற்கு மூடப்பட்டு விடும்...

பின்பு தண்ணீர் அந்த துவாரத்தின் அடியில் போக வழியில்லாத காரணத்தினால் அவை தண்ணிர் அனைத்தும் அடுத்த துவாரத்திற்கு பயணிக்கும்... அடுத்த துவாரத்தையும் அடைப்பதற்கு போதுமான அளவுநம் தெருக்களில் குப்பைகள் இருப்பதால் அந்த துவாரத்திற்கும் இதே கதிதான்... அந்த துவாரமும் தானாகவே குப்பைகளால் மூடப்பட்டு விடும்..

சராசரியாக ஒரு தெருவில் இருக்கும் 10 பாதாளச் சாக்கடைகளுமே நுழைவு துவாரங்களுமே மூடப்பட்டு விட்டால்... மழை நீர் எங்கு தான் போகும்... இதே கதி தான் ஒவ்வொரு தெருவுக்கும்... ஒவ்வொரு சாலைகளுக்கும்.... எல்லாம் கலந்து தானே ஒட்டு மொத்த சென்னை... கிட்டத்தட்ட நகரில் இருக்கும் அனைத்து துவாரங்களும் மூடப்பட்டிருக்கும்...

எல்லா துவாரங்களும் குப்பைகளால் லாக் செய்யப்பட்டு அடைபட்டுவிட்டால்...விழும்மழை நீரொல்லாம் வீதியெங்கும் நிரம்பி நீச்சல் குளம்போல் நிரம்பத்தானே செய்யும்....

ஏரிகள்.. கண்மாய்கள் இவைகளை ஆக்கிரமித்து வீடுகட்டியது தான் சென்னை வெள்ளப் பேரழிவிற்கு முக்கிய காரணம் அல்ல... நம் மக்களின் அனைவரின் தனிமனித பொறுப்புணர்ச்சி இல்லாமல் வீதிகளில் எறியப்பட்ட குப்பைக்ககழிவுகள் மட்டுமே முழுமுதற் காரணம்....

மக்களை குப்பை போடாமல் இருப்பதற்கு அறிவுறுத்தவும்.. கண்டிப்பதற்கும்.. தண்டிப்பதற்கும் தவறிய அரசாங்கம் இரண்டாவது காரணம்...

மழையினால் சேதமடையாத மற்ற ஊர்களிலும் இன்றும் இப்பொழுதும் வீதியெங்கும் குப்பைகள்இருக்கத்தான் செய்கின்றன... குப்பைதொட்டிகளின் வெளியே தான் ஒட்டு மொத்த குப்பையும் கிடக்கின்றது.. வீதியெங்கும் பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்ட குப்பைககள் தான் கண்ணில் தட்டுப்படுகின்றன...

நம் மக்களின் பொறுப்பின்மையால் இன்னமும் குப்பைகள் வீதியில் போடப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன... அரசும்.. மாவட்ட ஆட்சியர் நிர்வாகமும்.. பாதிக்கப்படாத ஊர்களி் இந்த குப்பைகளை களைவதற்கோ.. மேலும் மக்கள் குப்பைகள் போடக்கூடாது என்பதை வலியுறுத்தவோ செய்ய ஆரம்பிக்கவில்லை..

ஒவ்வொரு ஊரிலும் உள்ளே பயணிக்கும்சிறுசிறு வாய்க்கால்கள் அனைத்தும் குப்பைகள் மிதந்து நகரமுடியாமல் தேங்கி நிற்கின்றன... இவைகள் தூர் வாரப்படவில்லை...

நாளை இதே பேய் மழை வேறு ஊர்களுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஆஜரனால... மற்ற ஊர்களும் இரண்டே நாளில் மிதக்கத்தான் செய்யும்... அனைத்து வீடுகளிலும் உள்ளே தண்ணீர் புகத்தான் செய்யும்... அனைத்து மக்களும் மொட்டை மாடிகளில் தான் போய் முண்டியடித்து நிற்க வேண்டும்... அங்கும் மரணம் நிகழும்.. அங்கும் உணவுத்தட்டுப்பாடு நிலவும்...சாலைகளில் படகு சவாரி செய்து அவர்களுக்கும் நிவாரணக்குழு உணவு அளிக்க வேண்டும்... அவர்களுக்காகவும் திரும்பவும் அரசிடம் நடிகர்களிடம் கையேந்த வேண்டும்...

நம் பட்டாலும் திருந்தமாட்டோம்.. செத்தாலும் திருந்த மாட்டோம்...

தனியொரு இந்தியன் செத்து பிணமாய் பாடையில் பயணம் செய்யும் போது கூட வீதியெங்கும் மலர்கள் என்ற பெயரில் தன் கடைசிக்குப்பையை முடிந்தவரை எறிந்து விட்டு பயணிப்பவன் தானே நாம்.


  Leave a Reply

Tamil English

Message

 

All Rights Reserved. TamilA1.com Privacy Policy